உலகக் கிண்ணக் கால்பந்து மைதான கட்டுமானப் பணியில் சிறைக்கைதிகள்
முதல் முறையாக இந்த நாட்டில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளதால் பிரமாண்டமாக போட்டியை நடத்திக் காட்ட ரஷ்யா முடிவு செய்துள்ளது. தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கசான், சமரா, சோச்சி உள்ளிட்ட 11 நகரங்களில் போட்டிக்கான மைதானங்களை புனரமைக்கவும் புதுப்பித்து கட்டவும் ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் செலவுத் தொகையை கட்டுப்படுத்த ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கட்டுமானப்பணிகளில் சிறைக் கைதிகளை பயன்படுத்த ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட நுணுக்கங்களை ரஷ்ய சட்டத்துறை ஆராய்ந்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் கைதிகளை அதிக நேரம் வேலை வாங்கி விட்டு குறைந்த அளவே ஊதியம் அளிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது.