பீட்டர்சனுக்கு அணியில் இடமுமில்லை ஐ.பி.எல்.இல் விளையாடவுமில்லை
இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காததையடுத்து கெவின் பீட்டர்சன் ஹைதரபாத் அணியில் இணைவார் என்று சொல்லப்பட்ட நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
அண்மையில் சர்ரே அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சன் 355 ஓட்டங்களைக் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனுக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அவருக்கு இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. கெவின் பீட்டர்சன் மீது இன்னும் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்
கை ஏற்படவில் லை என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த பீட்டர் சன் ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் முடிவுக்கு வந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ. 2 கோடி கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்திருந்தது. இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காததையடுத்து, கெவின் பீட்டர்சன் மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதாக அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் கெவின் பீட்டர்சன் லீஷெஸ்டர் ஷைர் அணிக்காக விளையாடும் போது குதிக்காலில் காயம் ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக அவர் லண்டனில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள விருப்பதாலும் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் ஹைதராபாத் அணியில் மீண்டும் இணையவில்லை என கூறப்படுகிறது