பசில் மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு இன்று கடுவல நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது நீதவான் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.