மஹிந்த சந்திக்க திகதி கொடுத்தாராம் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விரைவில் சந்தித்துப் பேசுவர் எனத் தெரிவித்த றெஜனோல்ட் கூரே எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ தம்மை சந்திப்பதற்காக திகதி ஒன்றையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஹைட் பார்க்கில் நடந்தபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபாலவின் சந்திப்பு இருவருக்கும் இடையில் நெருக்கமான உறவை மீண்டும் வளர்க்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அடுத்த மே தினத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் தலைமையின் கீழ். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி அமையும். நாம் ஒன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமைகள் அல்லர் என்றும் அவர் மேலும் சொன்னார்.