போராட்டங்களை வன்முறைகளாக தூண்டிவிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் - மாவை
புங்குடுதீவு மாணவிக்கு நீதிகோரி நடைபெற்று வந்த அமைதிப் போராட்டங்களைக் களங்கப்படுத்தும் வகை யில் வன்முறைகளைத் தூண்டிவிடுவதில் சிலசக்திகள் ஈடுபட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
என மாவை சேனாதிராசா எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
நேற்றுக் காலை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் புங்குடுதீவு மாணவிக்குநீதிகோரி அமைதிவழிப் போராட்டத்திற்கு அணிதிரளுமாறு தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். வணிகர் கழகம் மற்றும் பல்கலைக்கழக சமூகம், மாணவர், இளைஞர்
அமைப்புக்கள் அழைப்புவிடுத்திருந்தன. பெருமளவில் பலதுறைகளையும் சேர்ந்த அறிஞர்கள் மதகுருமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் அணிதிரண்டிருந்தனர். காலை 11.00 மணியளவில் ஊர்வலங்கள் வந்து சேர்ந்தன. அந்தவேளைகளில் அந்த பெருந்திரளான கூட்டத்தின் முன்னால் பலபேர் மோட்டார் சைக்கிள்களில் தீவிரவிசையுடன் சென்றதை அவதானித்துஅச்சமடைந்தோம். உடன் தமிழர் ஆசிரியர் சங்கச் செயலாளர், மற்றும் யாழ். வர்த்தகசங்கத் தலைவரிடம் ஏற்படக்கூடிய விபரீதம் பற்றிக் கலந்துரையாடினோம். இந்த நீதிக்கான போராட்டத்தை முதல் நாளிலும் வன்முறைக்களமாக்கமுயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தமையையும் ஆராய்ந்தோம் . பின் பொறுப்பானவர்களைஒழுங்கைக் கடைப்பிடிக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
வன்முறை நிகழ்வுகள் இடம் பெறாமல் தடுக்கும் நோக்கிலும் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளில் சில சக்திகள் நடந்து கொள்வதை கட்டுபடுத்தும் வகையிலும்அமைதியான போராட்டம் நல்லெண்ணத்துடன் நடைபெற்றபொழுதும் விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
நீதிகோரி அரசிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆவணங்கள் அவசரமாகையளிக்கப்பட்டது. பின்னர் சில சக்திகள் யாழ். நீதிமன்றக் கட்டடத்தையும் வழக்கறிஞர்களையும், வாகனங்களையும் தாக்கியும் கல்லெறிந்தும் வன்முறைகளிலீடுபட்டதாகஅறிந்தோம். பொலிசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து கலகச் சூழலைக் கட்டுப்படுத்தமுயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அறிந்த பொழுது வேதனையடைகின்றோம்.
கைதுசெய்யப்பட்ட ஈனச் செயல் புரிந்தகொலையாளிகளைத் தங்கள் கைகளில் தரவேண்டுமென்று வன்முறையில் ஈடுபடுவது அந்த மாணவிக்கு அத்தகைய ஈனச்செயல்களுக்கு நீதி கிடைக்காமற் போவதற்கே இச் செயல்கள் இட்டுச் செல்ல முயற்சிக்கப்படுகிறதா? என்றகேள்வி எழுகின்றது. இந்த நிலையில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிசார் போதாதென்றும் இராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதாகப் பொலிஸ்மாஅதிபர் கருதுவதாக அறிந்து, எமதுதலைவர் சம்பந்தன்,இராணுவத்தை ஈடுபடுத்தவேண்டாம் எனக்கோரியுள்ளார். இது தொடர்பாகஎன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். நானும் இராணுவத்தை மீண்டும் மக்கள் மத்தியில் பாதுகாப்பு என்னும் பெயரில் அழைக்கவேண்டாமெனக் கேட்டுள்ளேன்.
இந்த சம்பவங்களை எல்லாம் மறைத்து விட்டு உண்மைக்குமாறான செய்திகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளன. இதனையிட்டு மனம் வருந்துகிறோம். யாழ்.தெருக்களில் பலமோட்டார் வண்டி களில் இளைஞர்கள் பலர் மிகத் தீவிரமாகச் செல்வதை அவதானித்தோம். அவர்கள் யாரென்று அறியமுடியவில்லை. இதைப் போன்று எங்கள் வாழ் நாளில் எத்தனையோ போராட்டங்களையும் பேரழிவுகளையும் அனுபவித்துவிட்டோம்.
நன்றி உள்ள மக்களும் இளைஞர்களும், மாணவர்களும் அநீதிக்கெதிராகபேரெழுச்சி கொண்டு அணிதிரண்டது எழுச்சியைத்தந்தது. ஆனால் இதனைப் பொறுக்காத உள்நோக்கங் கொண்டசக்திகள் வன்முறையைத் தூண்டியும், ஈடுபட்டும் வருவது வேதனை தருகிறது. எனவே அமைதிவழியில் நாம் போராடு வோம். நீதிமன்றங்களை நீதி வழங்கி அக் கொலை காரர்களுக்கு உச்சத்தண்டனை கிடைக்க வழிவகுப்போம். நீதிமன்றைக் கூடத் தாக்கும் வன்முறைவேண்டாம்.வன்முறையில் ஈடுபடவேண்டாம் மீண் டும் ஒருபேரழிவுக்கு இட்டுச் செல்ல யாருக்கம் இடமளிக்கவேண்டாம் என வேண்டுகிறோம்.