மன்னார் ஆயருக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை சேர்க்கப்பட்டுள்ளார்.
மன்னார் ஆயர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்திக்கச் சென்று கொண்டிருந்த போதே, அவருக்குத் திடீர் சுகவீனம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்னார் ஆயருக்குத் தேவையான மருத்துவ சிகிக்சைகளை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கொழுழும்பு தேசிய மருத்துவமனைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை மன்னார் ஆயர் இல்லமும் உறுதிப்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், ஆயரை சந்திக்க, மருத்துவர்கள் எவரையும் அனுமதிக்கப்படவில்லை.