Breaking News

இம்மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கை நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கலைக்கப்பட்டு புதுிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும், இம்மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தெரிவித்தார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்ட, புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் 20வது திருத்தச்சட்ட யோசனை வரும் 13ம் நாள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். 20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, புதிய தேர்தல் முறையின் கீழேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில், எதிர்க்கட்சி உறுதியாக இருக்கின்ற நிலையில், தற்போதைய முறையின் கீழேயே தேர்தல் நடத்தப்படும் என்று ஐதேக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.