சூப்பர் ஸ்டாரை இயக்கும் ரஞ்சித்!
‘லிங்கா’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற செய்திதான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. இந்த படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கப்போவதாகவும், இப்படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாகவும் செய்தி வந்தது.
இந்நிலையில், தற்போது ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறாராம்.
தற்போது ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவதாக வெளிவந்த செய்தி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.