Breaking News

நல்லாட்சி என்ற பெயரில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவது அச்சமாகவுள்ளது

நல்­லாட்சி என்ற பெயரில் வெளிநாட்­ட­வர்கள் இலங்­கைக்கு வருகை தரு­வது எமக்கு பெரும் அச்­ச­மாக உள்­ளது. சுதந்­திர ஊடக செயற்­பா­டுகள் தொடர்பில் சர்­வ­தேசம் தலை­யிட வேண்­டி­ய­தில்லை என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

சுதந்­திர ஊடக செயற்­பாட்­டிற்கு சீர்தி­ருத்தம் அவ­சி­ய­மாகும். எனினும் குறித்த சீர்தி­ருத்­தத்தில் எமது நாட்­ட­வர்­களின் அனு­ப­வங்­க­ளையே உள்­ள­டக்க வேண்டும். அதனை விடுத்து சர்­வ­தே­சத்தின் மாதிரி எமக்கு தேவை­யில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் வெகு­சன ஊட­கங்கள் தொடர்­பான சீர்­தி­ருத்தம் தொடர்­பி­லான தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

வெகு­சன ஊட­கங்­கள் தொடர்பில் சீர்­தி­ருத்தம் மிகவும் அவ­சி­ய­மாகும். அதன்­பி­ர­கா­ரமே புதிய ஊடக கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அர­சியல் வாதிகள் ஊட­கங்­களை அடி­மைப்­ப­டுத்த முனை­கின்­றனர். அதே­போன்று ஊட­கங்கள் அர­சி­யல்­வா­தி­களை அடி­மைப்­ப­டுத்த முனை­கின்­றன.

எனினும் நாட்டு மக்­களே இந்த இரண்­டையும் தனது கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­துள்­ளனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஊட­கங்­களின் கருத்­தையும் ஏற்­காது, அரி­சி­யல்­வா­தி­களின் கருத்­தையும் ஏற்­காது மக்கள் புத்­தி­சா­லித்­த­ன­மாக வாக்­க­ளித்து தமக்கு விருப்­ப­மான தலை­வர்­களை தேர்ந்­தெ­டுக்­கின்­றனர்.

இந்­நி­லையில் அரச ஊட­கங்கள் மாத்­தி­ர­மின்றி தனியார் ஊட­கங்­களும் ஒழுக்­க­வியல் கோட்­பாட்­டின்­படி செயற்­ப­ட­வேண்டும். இதே­வேளை சுதந்­திர ஊடக செயற்­பாட்­டிற்கு சீர்­தி­ருத்தம் அவ­சி­ய­மாகும். எனினும் குறித்த சீர்தி­ருத்­தத்தில் எமது நாட்­ட­வர்­களின் அனு­ப­வங்­க­ளையே உள்­ள­டக்க வேண்டும். அதனை விடுத்து சர்­வ­தே­சத்தின் மாதிரி எமக்கு தேவையில்லை.

நல்லாட்சி என்ற பெயரில் வெளிநாட்ட வர்கள் இலங்கைக்கு வருகை தருவது எமக்கு பெரும் அச்சமாக உள்ளது. சுதந்திர ஊடக செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசம் தலையிட வேண்டியதில்லை.