Breaking News

ஜூலையில் நாடாளுமன்றத் தேர்தல் – ரணில் அறிவிப்பு

வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தச்சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் மேலும் மாற்றங்கள் செய்வதானால், கருத்துவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

உயர்ந்த மட்டத்தில் அபிவிருத்தி அடைந்த ஜனநாயகம் மற்றும் அரசியல் உறுதிப்பாடு நிலவுகின்ற போது தான் அனைத்துலக சமூகம், ஒரு நாட்டைக் கருத்தில் கொள்ளும். அதன் பின்னரே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க முயற்சிப்பார்கள். எனவே, ஜனநாயக ஆட்சி இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும். ஊழல் அகற்றப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.