Breaking News

முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி செலுத்திய வட மாகாண சபையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

நீதி­மன்றத் தீர்ப்பை மீறி முள்­ளி­வாய்க்கால் நினை­வஞ்­ச­லியை வட­மா­காண சபை­யினர் அனுஷ்­டித்­த­மைக்கு உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். வட மாகா­ணத்தின் தன்­னிச்­சை­யான செயற்­பாடு நாட்­டுக்கு அச்­சு­றுத்­த­லா­கி­விட்­டது என ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம் ­ஜ­யந்த தெரி­வித் தார்.

மே 19ஆம் திகதி இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தின­மாக மட்­டுமே கொண்­டா­டப்­பட வேண்டும். புலி­களை நினைவு கூர இலங்­கையில் அனு­மதி இல்லை. மீறி செயற்­பட்டால் உட­ன­டி­யாக அவர்­களை கைது­செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் மேலும் கூறு­கையில்,

மே மாதம் 19 ஆம் திகதி எம்மை பொறுத்த வரையில் மிகவும் முக்­கி­ய­மான தின­மாகும். எமது நாடு தீவி­ர­வா­தத்தில் இருந்து முழு­மை­யாக விடு­பட்ட நாள். விடு­தலைப் புலி­க­ளு­ட­னான ஆயுதப் போராட்­டத்தை நாம் எமது இரா­ணுவ வீரர்­களின் உத­வி­யுடன் முடி­வுக்கு கொண்டுவந்தோம். இதில் நாம் பொது மக்­களை கொல்­லவோ அல்­லது தமிழ் மக்­களை பழி­வாங்­கவோ முயற்­சிக்­க­வில்லை. நாட்டில் தலைதூக்­கி­யி­ருந்த புலிப் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­ன­தா­கவே எமது போராட்டம் அமைந்­தி­ருந்­தது. 

இதில் எமது இரா­ணுவ வீரர்­களின் உயிர்த் தியா­கத்தில் இந்த வெற்­றியை பெற்­றுக்­கொண்­டுள்ளோம். எனவே இன்­றைய நாளில் எமது இரா­ணுவ வீரர்­களை மட்­டுமே நினைவு கூர வேண்டும். ஆனால் இந்த அர­சாங்கம் இரா­ணுவ வெற்­றி ­தி­னத்தை அனுஷ்­டிக்­காது பிரி­வினை கொள்­கையை தோற்­க­டித்த நாளாக கொண்­டாட வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இதை ஒரு­போதும் எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாட்டில் பிரி­வினை வாதம் இன்னும் முறி­ய­டிக்­கப்­ப­ட­வில்லை. வடக்கில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்­கியுள்­ளது. அதன் கார­ணத்­தி­னா­லேயே வடக்கில் புலி­களை நினை­வு­கூ­ரு­மு­க­மாக நினை­வஞ்­சலி நிகழ்­வு­களை நடத்­து­­கின்­றனர்.

எமது அர­சாங்கம் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்­ததில் இருந்து ஒரு சந்­தர்ப்­ப­தி­லேனும் வடக்கில் விடு­தலைப் புலி­களை நினைவுகூர அனு­ம­திக்­க­வில்லை. நாட்டில் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு இடம்கொடுப்­ப­தில்லை என்ற இறுக்­க­மான நிலைப்­பாட்டில் எமது அர­சாங்கம் செயற்­பட்­டது. ஆனால் இந்த அர­சாங்கம் விடு­தலைப் புலி­களை அங்­கீ­க­ரிக்கும் வகையில் வடக்கில் முள்­ளி­வாய்க்கால் நினை­வஞ்­ச­லியை நடத்த அனு­ம­தித்­துள்­ளது. 

விடு­தலைப் புலி­களை நினைவு கூருவதை நீதி­மன்றம் தடை விதித்­துள்ள நிலையில் வட மாகாண சபையின் ஏற்­பாட்டில் முள்­ளி­வாய்க்கால் நினை­வஞ்­ச­லியை நடத்­தி­யுள்­ளனர். அப்­ப­டி­யாயின் நீதி­மன்ற ஆணையும், அர­சாங்­கமும் வட­மா­காண சபைக்கு கட்­டுப்­பட்­டுள்­ளதா என்றே எண்ணத் தோன்­று­கின்­றது. எமது அர­சாங்­கத்தில் விடு­தலைப் புலி­களும் அவர்­க­ளது அர­சியல் நண்­பர்­களும் எமக்கு பயந்­தனர். 

ஆனால் இந்த அர­சாங்­கத்தில் விடு­தலைப் புலி­களின் அர­சியல் நண்­பர்­களை கண்டு அர­சாங்கம் அஞ்­சு­கின்­றது. இதுதான் நாட்டின் உண்மை நிலை­மை­யாகும். ஆகவே இந்த ஆட்­சியின் தன்­மையை மக்கள் நன்­றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேபோல் நீதி­மன்றத் தடை உத்­த­ர­வையும் மீறி வடக்கில் புலி­களை நினைவு கூர்ந்­துள்­ளார்கள் எனின் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அவர்­களை கைது­செய்து பிரி­வி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும்.அதை விடுத்து பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை சர்வதேச பிரிவினை வாதத்துடன் ஒன்றிணைத்து. அவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவே செயற்படுகின்றனர். வட மாகாண சபையின் தன்னிச்சையான செய ற்பாடு நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என குறிப்பிட்டார்.