Breaking News

ஜோன் கெரி தமிழ் மக்களை புறக்கணிக்க கூடாது - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வலியுறுத்தல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, தமிழ் மக்களை புறக்கணிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. அரசாங்க தரப்பினரை மாத்திரம் சந்தித்துவிட்டு விஜயத்தை நிறைவு செய்யாமல் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களையும் ஜோன் கெரி சந்திக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் சர்வதேச விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கத்தை ஒத்துழைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இடம்பெறுகின்ற தமிழர்களின் கைதுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.