Breaking News

பஷிலுக்கு பிணை இல்லை - தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கடுவெல நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.  பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு இவ்வாறு பிணை மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன்படி பஷில் ராஜபக்ஷ, நிஷால் ஜெயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ.ரணவக ஆகியோரை எதிர்வரும் 10ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.