Breaking News

ரணிலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் கபீர் காசிம் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் கட்சியின் யாப்புக்கு முரணானது என ஐ.தே.க. உறுப்பினர் சித்ரா ஸ்ரீமணி மற்றும் கிஸ்லி லால் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு மீதான விசாரணை நேற்றுப் புதன்கிழமை நுகேகொட நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.