மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மீனவர்களின் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பேச்சுவார்த்தைகள் மூலம் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும் இதில் எவ்விதமான உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மணிசங்கர் ஐயர் இந்திய செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.