ஜனாதிபதியுடன் கெரி சந்திப்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்னதாக வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினருடன் ஜோன் கெரி சந்திப்பு நடத்தியிருந்தார்.மேலும் தமிழ் தலைவர்களையும் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.