முடிவுக்கு வருகிறதா சந்தர்போல் எனும் சகாப்தம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தேர்வு செய்யப்படாததையடுத்து சிவநாராயண் சந்தர் போல் ஓய்வு முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய கிரிக் கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. ஜுன் 3ஆம்திகதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கான அணியில் இடம் கிடைக்கும் என்று அந்த அணியின் மூத்த வீரர் சந்தர்போல் நம்பினார். ஆனால் கிளைவ் லோய்ட் தலைமையிலான தேர்வுக் குழுவினர், சந்தர்போலை தேர்வு செய்யவில்லை.
கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் சந்தர்போலின் ஆட்டத்தை கவனத்தில் கொண்டு, அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் கிளைவ் லோய்ட், சந்தர்போலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''கடைசியாக நீங்கள் விளையாடிய தென்னாபிரிக்கா, இங்
கிலாந்து அணிகளுக்கு எதிரான 6 டெஸ்ட்களில் 183 ஓட்டங்களையே எடுத்துள்ள தால், தங்களது தகுதியை கருத்தில் கொண்டு அணி யில் சேர்க்க இயலவில்லை'' என்று தெரிவித்துள்ளார். அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது என்றும் கிளைவ் லோய்ட் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தர் போல், மேற்கிந்தியதீவுகள் அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11,867 ஓட்டங் களை எடுத்துள்ளார். 30 சதங்களும் சந்தர்போலின் ஓட்டங்களில் அடங்கும். கடந்த 1994ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக, அவர் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். டெஸ்ட் போட்டி யில் அவரது சராசரி 51.37 ஆகும். ஒருநாள் போட்டிகளிலிருந்து கடந்த 2011ஆம் ஆண்டே அவர் ஓய்வு பெற்று விட்டார்.