Breaking News

ஜெகத் டயஸ் நியமனம் – கருத்து வெளியிடாமல் நழுவினார் ஐ.நா பேச்சாளர்

இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கருத்துக்காக காத்திருப்பதாக, ஐ.நா பொதுச் செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஐ.நலா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், பெயரிடப்பட்டிருந்த, 57வது டிவிசனை சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, போர்க்குற்றங்களை ஊக்குவிப்பதாக கருதப்படுவதாகவும், இதுகுறித்த ஐ.நா பொதுச்செயலரின் கருத்து என்ன என்றும், இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

அதற்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர், இந்த விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை முதலில் கருத்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று தாம் நினைப்பதாகவும், பொறுத்திருந்து பார்க்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.