மைத்திரி - மஹிந்த சந்திப்பு வெற்றி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்ததாக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார். இவ்வாறான சந்திப்பொன்று எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, பைசர் முஸ்தபா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.