Breaking News

கோத்தாவுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு

தேசத்துக்கு மகுடம்  கண்காட்சியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோத்தாபய ராஜபக்ஷவுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் செயலாளர் நீல் டி அல்விஸ்( தற்போது மாத்தளை மாவட்ட செயலாளர்), அம்பாறை நகர சபையின் தலைவர் இந்திக நலின் ஜயவிக்ரம மற்றும் அம்பாறை, இலக்கம் 13, முதலாவது ஒழுங்கையில் வசிக்கும் எஸ்.ஏ. தினுஸ் பிரபாத் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.