Breaking News

நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ளோம் - ஜனாதிபதி

நீதி­மன்றம் அர­சியல் அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்ட யுகத்­திற்கு முடிவு கட்டி நீதி­மன்ற சுயா­தீ­னத்தை உயர்ந்த பட்சம் உறு­திப்­ப­டுத்த புதிய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­த­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்­கவை போன்று முன்னாள் பாது­காப்பு செயலாளர் கோட்­ட­பாய ராஜபக் ஷ மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் விடுத்த கோரிக்­கை­க­ளுக்கு இன்று எது­வித அர­சியல் அழுத்­தங்­க­ளு­மின்றி சுயா­தீன தீர்ப்­புக்கள் இத­னா­லேயே கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அக்­கு­றணை பிர­தேச சபையின் புதிய மூன்று மாடி கட்­டிட தொகு­தி­யினை நேற் றுக் காலை திறந்து வைத்து உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

நாட்டு மக்­களின் சுதந்­தி­ரத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தெளி­ வான வேலைத்­திட்­டங்கள் கடந்த சில மாத ங்­க­ளுக்குள் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

விருப்பு வாக்கு தேர்தல் முறை கார­ண­மாக எமது அர­சியல் கலா­சா­ரத்தில் பல்­வே­று­பட்ட வீழ்ச்­சிகள் ஏற்­பட்­டன. விருப்பு வாக்கு முறை­மையில் இருப்­பது நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பான அர­சியல் நோக்கு அல்­ல. கொள்­கை­யன்ற நபர்­களை கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய முறையே இருக்­கின்­றது.

அர­சி­யலில் இருக்க வேண்­டிய கூட்டுப் பொறுப்பு மற்றும் பொது­வான தன்மை விருப்பு வாக்கு தேர்தல் முறை­யினால் அழிந்து போனது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை ஆரம்­ப­மா­னது தொடக்கம் அமுலில் இருக்கும் இத்­தேர்தல் முறை­யினை சீர்­தி­ருத்தி நாட்டில் அறி­ஞர் கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­களின் கருத்­துக்­க­ளு க்கு அமைய புதிய தேர்தல் முறை­யினை உரு­வாக்கும் தேவை இன்று வலு­வான முறையில் ஏற்­பட்­டுள்­ளது.

மக்­களின் வாக்குப் பலத்தை கெள­ர­வித்து உத்­தி­யோ­க­பூர்வ காலம் நிறை­வ­டைந்­துள்ள சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் உரிய நேரத்­திற்கு தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நிறு வனங்களுக்கு தாம் விரும்பிய பிரதிநிதி களை நியமிக்கும் உரிமையினை உரிய நேர த்திற்கு நாட்டு மக்களுக்கு வழங்குவது ஜன நாயகத்தைக் கெளரவிக்கும் அரசின் பொறு ப்பாகும் என்றார்.