எல்லைத்தாண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுவாமிநாதன்
எல்லைத்தாண்டி வரும் தமிழக மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் - நாகபட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவானாலும், இலங்கையானாலும் அந்தந்த நாடுகளின் கடல் எல்லையை பாதுகாத்துக் கொள்ளும் இறைமை அந்தந்த நாடுகளுக்கு இருக்கிறது.
இதன்அடிப்படையில் எல்லை மீறுகின்றவர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் எல்லை மீறுகின்ற தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்படுவார்கள் என்று இலங்கையின் பிரதமர் கூறியதாக வெளியிடப்பட்ட கூற்று, திரிபுப்படுத்தப்பட்டு வெளியிட்டது என்றும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க இரண்டு நாடுகளும் மனிதாபிமான ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்