Breaking News

புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சும் கோத்தபாய

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தீர்மானித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஸ அமெரிக்க - இலங்கை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவராவார். அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

மீண்டும் அமெரிக்காவில் குடியேறப் போவதில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக்ச போட்டியிட உள்ளார். எனினும் எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பது குறிப்பிடப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் அச்சுறுத்தல் காரணமாக கோத்தபாய இவ்வாறு அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 1994ம் ஆண்டு கோத்தபாயவிற்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நடவடிக்கைகளை ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.