Breaking News

கோத்தா நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட உள்ளார்



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட உள்ளார்.எதிர்வரும் 11ம் திகதி கோத்தாபயவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே கோத்தாபயவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.விசாரணைகளின் போது தகவல்களை வழங்க கால அவகாசம் தேவை என கோத்தாபய தெரிவித்திருந்தார்.