நேபாள மக்களுக்கு கோடிகளை வழங்கிய விஜய்
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டியில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய்.ஒரு நடிகன் வெறும் நடிகனாக மட்டுமே இருக்கக் கூடாது சமுக உணர்வுள்ள மனிதனாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.
இன்றும் தன் பெயரில் இயங்கி வரும் விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி விஜய் செய்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த கோரமான நேபாள பூகம்பத்தால் அங்கும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் மாறியது.
பிறகு பலரும் அங்கு வாழும் மக்களுக்கு தங்கள முடிந்த உதவி கரம் நீட்டி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் 12 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இதுவரை எந்த பிரபலங்களும் நிதிதர முன்வராத நிலையில் நடிகர் விஜய் ரூ. 5 கோடி கொடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வராதபோதும் மற்ற நடிகர்களும் உதவி செய்ய முன்வருவார்களா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.