Breaking News

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை - ஐ.தே.க. தெரி­விப்பு

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு நாம் ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை. அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தை சிறுப்­பான்மை அர­சாங்கம் என்ற வகையில் நிறை­வேற்றி காட்­டி­ய­தனை போன்று நம்­பிக்­கை­யில்­லாத பிரே­ர­ணை­யையும் தோற்­க­டிப்போம் என ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்­றத்­தை கலைத்து தேர்­த­லுக்கு செல்­வதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் நோக்­க­மாக இருப்பின் பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கலைத்து தேர்­த­லுக்கு செல்­வதே உரிய தீர்­வாகும் என ஆளும் ­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க குறிப்­பிட்டார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ளதாக கூறப்படும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து கருத்து தெரி­விக்கும்போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டில் எந்­த­வொரு அர­சாங்­கமும் செய்­யாத பாரி­ய­ள­வி­லான சேவையை 100 நாட்­களில் எமது அர­சாங்­கமே செய்­தது. இந்த வேலைத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது. இந்­நி­லையில் கடந்த காலங்­களில் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோர் தற்­போது அதே சூழலை ஏற்­ப­டுத்த முனை­கின்­றனர். இதற்­க­மைய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீளவும் பிர­த­ம­ராக்க முனை­கின்­றனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக்கும் கனவு ஒரு போதும் சாத்­தி­ய­மா­காது. அது வெறு­மனே பகல் கன­வாகும். இந்­நி­லையில் தற்­போது பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் பிர­யத்­த­னத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­போ­வ­தாக எம்மை எச்­ச­ரிக்­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்­தை கலைத்து தேர்­த­லுக்கு செல்­வதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் நோக்­க­மாக இருப்பின் பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கலைத்து தேர்­த­லுக்கு செல்­ல­வதே உரிய தீர்­வாகும். இதனை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும். நாம் அதற்­கெல்லாம் ஒரு­போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை. அத்­தோடு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு மாத்­தி­ர­மின்றி நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ரா­கவும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வர முனை­கின்­றனர்.

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தற்கு பல்­வேறு இடை­யூ­று­களை விளை­வித்த மஹிந்த ராஜ­பக் ஷ ஆத­ரவு கும்பல் 100 நாள் வேலைத் திட்டத்தை வெற் றிகரமாக முடித்து காட்டிய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முனைகின்றது.

எனவே அரசி யலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை சிறுபான்மை அரசாங்கமாக வெற் றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்தோம். அதேபோன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணையையும் தோற்கடிப்போம் என்றார்.