Breaking News

சோமவன்ச உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார்

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று அதாவது ஜனவரி மாதம் 9ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் சூழ்ச்சிகள் குறித்து விசாரணைகளை நடத்துமாறு கோரியே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.