Breaking News

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நாளை வவுனியாவில் கூடுகிறது

முக்கிய விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை திங்கட்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. 

நாளை காலை 10 மணிக்கு வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், புதிய அரசின் நடவடிக்கைகள், அங்கத்துவ கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ள ஆசன பங்கீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் கலந்துரையாடப்படவுள்ளன. 

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.