Breaking News

வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினராக சிவநேசன் நியமனம்

வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக இன்றைய தினம் புளொட் அமைப்பின் உறுப்பினர் கத்தையா சிவநேசன் பதவியேற்றுள்ளார்.

இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் வட மாகாண சபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் முன்னிலையில் கந்தையா சிவனேசன் (பவன்) அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், ராகவன், தவராஜா மாஸ்டர் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (பவன்) தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.