புங்குடுதீவு மாணவி படுகொலை! சந்தேக நபர் நால்வரின் வீடுகள் தீக்கிரை
பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ள புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வரின் வீடுகள் பொதுமக்களால் எரிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை புங்குடுதீவுப் பகுதியில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளே பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் சந்தேக நபர்கள் மூவரின் வீடுகளில் யாரும் இல்லாத வேளை பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எனினும் மற்றைய வீட்டை தீக்கிரையாக்கும் வேளை பார்த்து சந்தேகநபரின் அண்ணன் உள்ளே இருந்து வெளியில் வந்த வேளை அவர் பொதுமக்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மேலதிக சிகிச்சைக்காக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.