வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது
வடமாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் தமக்கான நியமனங்களை வழங்க கோரி புதன் கிழமையிலிருந்து யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இப்போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவினை வழங்கியிருந்தது.புதன்கிழமை காலையிலிருந்து தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளை வடமாகாணத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலரை தவிர வேறு எவரும் நேரடியாக சந்திக்காததோடு உறுதியான பதிலேதினையும் வழங்கி இpருக்கவில்லை.
இந்நிலையில் வடமாகாணசபை அமர்வின் பின்னராக நேரில் சென்ற அமைச்சர்கள் குழு உறுதி மொழியினை வழங்கியதையடுத்தே போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.