Breaking News

வடமாகாணசபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் - ரணில் உறுதி

வட மாகாண சபைக்கு முழு­மை­யான அதி­கா­ரங்­களை வழங்கி தமது சொந்த இடங்­களை இழந்து அநா­த­ர­வான அப்­பாவி தமிழ் மக்­களின் காணி­களை மீள கைய­ளிப்போம்.மேலும் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதே எமது அரசின் பிர­தான நோக்கம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்துள்ளார். 

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவின் 22 ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு நேற்று காலை புதுக்­க­டை­யி­லுள்ள அன்­னா­ரது உரு­வச்­சி­லைக்கு அருகில் இடம் பெற்ற வைப­வத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

“சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தின் போது விடு­தலை புலி­க­ளினால் முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாஸ படு­கொலை செய்­யப்­பட்டார். அன்­னாரை இறுதி தரு­ணத்தில் சந்­தித்த நபர்­களுள் நானும் ஒரு­வ­னாகும். எவ்­வா­றா­யினும் அவ­ரது ஆட்­சியின் போது இன, மத பேதங்­களை பாராமல் அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் சம­மான அந்­தஸ்தை வழங்­கினார். எனினும் அவர் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­கவே செயற்­பட்டார்.

உலகில் பிறக்கும் ஒவ்­வொரு மனி­தனும் பிறப்பின் பிர­கா­ரமே இன ரீதி­யாக பிள­வுப்­பட்­டுள்­ளனர். தனது பெற்­றோர்கள் பின்­பற்றும் மத ,இனத்தின் அடிப்­ப­டை­யி­லேயே மனிதன் இன ரீதி­யாக பிள­வு­ப­டு­கின்றான். ஆகவே இன­வா­தத்தின் அடிப்­ப­டையில் நாம் பிள­வுப்­பட வேண்­டிய தேவைப்­பாடு கிடை­யாது. இன ரீதி­யாக பிள­வுப்­ப­டாமல் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் அனை­வரும் ஐக்­கி­ய­மாக வாழப்­ப­ழகிக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாஸ இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் செயற்­பட்டார்.

அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தின் போது தமிழ் மக்­க­ளுடன் மிகவும் சமீ­ப­மாக செயற்­பட்டார். இன ரீதி­யான பேதம் காட்­ட­வில்லை. இதன்­பி­ர­கா­ரமே வடக்கு கிழக்கில் வீட்டு திட்­டத்­தினை ஆரம்­பித்­த­துடன், வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்­க­ளுக்கு ஜன­ச­வியை பெற்­றுக்­கொ­டுத்தார். இதன் கார­ண­மா­கவே அவர் விடு­தலை புலி­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்ட வேளை வடக்கு கிழக்கில் வௌ்ளை கொடி தொங்க விடப்­பட்­டி­ருந்­தது.

ஆகவே தற்­போது நாட்டில் தேசிய ஒற்­று­மையை வலுப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம். ரண­சிங்க பிரே­ம­தாஸ தலை­மையில் நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தனை போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதே எமது பிர­தான நோக்­க­மாகும்.

ஆகவே தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்­களின் முழு­மை­யான ஆத­ர­வினை பெற­வேண்­டி­யுள்­ளது. அதற்­கான பொறி­மு­றையை கட்­ட­மைக்க வேண்­டி­யுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தை போன்று வடக்கு மாகா­ணத்­திற்கும் அதி­கா­ரங்­களை வழங்க வேண்­டி­யுள்­ளது. அத்­தோடு யுத்­தக்­கா­லத்தின் போது தமது சொந்த இடங்­களை இழந்து நடுத்­தெ­ருவில் விடப்­பட்­டுள்ள அப்­பாவி தமிழ் மக்­களின் காணி­களை மீள கைய­ளிக்க வேண்­டி­யுள்­ளது.. இதற்­க­மைய வடக்கில் இரா­ணு­வத்­திற்கு தேவை­யற்ற காணி­களை நாம் மக்­க­ளிடம் கைய­ளிக்க உள்ளோம். நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதே எமது அரசின் பிர­தான நோக்­க­மாகும். அதற்­கான பொறி­மு­றையை கட்­ட­மைக்க வேண்­டி­யுள்­ளது.

தேசிய ஐக்­கியம் மற்றும் ஜன­நா­ய­கத்தை வலுப்படுத்தும் வகையில் மனித உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை எம்மால் பறிக்க முடியாது. இந்த காரணங்களை மையப்படுத்தி சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு நாமே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆகவே சர்வதேசத்துடன் எம்மால் மோத முடியாது.

இந்நிலையில் இலங்கையர் என்ற அடிப்படையில் தேசிய ஐக்கியத்தை கொண்ட இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுப்படுவோம்” என்றார்.