Breaking News

குரு பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி? விருச்சிகம்

விசாகம் 4, அனுஷம், கேட்டை 100/60
பத்தாமிடம் வருகிறார் தொழிலில் பத்திரம் செய்த நன்றியை ஒரு நாளும் மறவாத விருச்சிக ராசி அன்பர்களே! இதுவரை குரு பகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக, எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார்.

இப்போது 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களைத் தர முடியாது. பத்தாம் இட குரு பற்றி, ஜோதிடத்தில் ""பத்தாமிட குரு பதவிக்கு இடர் என்பர். அதாவது அவரவர் தொழில், வேலையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய சமயம் இது. 

இதனால் சஞ்சலம் கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது 5-ம் இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். டிசம்பர் 20-ந்தேதி 11-ம் இடமான கன்னி ராசிக்கு குரு அதிசாரம் ஆகிறார். இது மிகவும் சிறப்பான இடம். அப்போது, அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதார வளம் காணச் செய்வார். 

சனி பகவான் 2015 ஜூன் 12 அன்று, வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். அவரால், பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது என்பதால், குருவின் பார்வை இழந்ததை திரும்பத்தந்து விடும். 

மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.குரு பெயர்ச்சியால் சுமாரான பலனை காணலாம். செலவு அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும், அதை சாமர்த்தியமாக முறியடித்து வெற்றி காணலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். 

குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். ஆனாலும், சற்று சிரத்தை எடுத்தால் கைகூடும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். சிலரது குடும்பத்தில் தற்காலிகமாக பிரியும் நிலைகூட உருவாகிறது. எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 

அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனம் தேவை. வீடு-மனை வாங்கும் எண்ணத்தை ஒத்தி போடுங்கள். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்காமல் போகாது. எனினும், பணவிஷயத்தில் கவனம் தேவை. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 

அலைச்சல் இருக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால், உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வுதாமதம் ஆகலாம். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். சிலர் பதவியை விட்டு விலகும் எண்ணம் தோன்றும். எனினும், குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புகழ், கிடைக்காமல் போகலாம். 

அரசியல்வாதிகள், சுமாரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பது சிரமம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயத்தில் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பவர்களும் நல்ல பலனைக் காணலாம். பெண்கள் சீரான நிலையில் இருப்பர். 

குடும்ப ஒற்றுமைக்காக கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 

பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். முருகன் வழிபாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வழிபடுங்கள்.

உங்கள் இராசிக்கு எப்படி?

மேஷம்                  இடபம்              மிதுனம்            கடகம்        

சிம்மம்                   கன்னி              துலாம்               விருட்சியம்

தனு                          மகரம்              கும்பம்               மீனம்