Breaking News

7 தமி­ழர்­களின் விடு­த­லையை கௌரவ பிரச்­சி­னை­யாக எடுக்க வேண்டும் - ராமதாஸ்

தமி­ழக அரசின் முடி­வுக்கு எதி­ராகத் தொட­ரப்­பட்ட வழக்கு என்­பதால் ஏழு தமி­ழர்­களின் விடு­த­லையை கௌரவ பிரச்­சி­னை­யாக எடுத்துக் கொண்டு செயல்­பட வேண்டும் என்று பா.ம.க. நிறு­வுநர் ராமதாஸ் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், "ராஜீவ் கொலை வழக்கில் எந்தத் தவறும் செய்­யாமல் தண்­டிக்­கப்­பட்டு 24 ஆண்­டு­க­ளாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள 7 தமிழர் விடு­த­லைக்கு எதி­ரான வழக்கை எதிர்­வரும் ஜூலை 15 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்­வ­தாக என்று உச்ச நீதி­மன்றம் அறி­வித்­தி­ருக்­கி­றது. இவ்­வ­ழக்கு கிடப்­பி­லேயே போடப்­பட்டு விடுமோ? என்ற கவ­லையை உச்ச நீதி­மன்ற அறி­விப்பு போக்­கி­யி­ருக்­கி­றது.

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்­ட­னையை ஆயுள் தண்­ட­னை­யாக குறைத்து கடந்த ஆண்டு பிப்­ர­வரி 18 ஆம் திகதி உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. இதை­ய­டுத்து, இவர்­க­ளையும், ஏற்­க­னவே ஆயுள் தண்­டனை அனு­ப­வித்து வரும் நளினி, ரவிச்­சந்­திரன், ரோபர்ட் பயாஸ், ஜெயக்­குமார் ஆகி­யோ­ரையும் விடு­தலை செய்­யப்­போ­வ­தாக தமி­ழக அரசு அறி­வித்­தது.

இதை எதிர்த்து மத்­திய அரசு தொடர்ந்த வழக்கை அர­சி­ய­ல­மைப்பு சட்ட அமர்­வுக்கு மாற்றி கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி அப்­போ­தைய உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி சதா­சிவம் தலை­மை­யி­லான அமர்வு ஆணை­யிட்­டது.

இந்த வழக்கில் தமி­ழக அரசு கடை­ப்பி­டித்த அலட்­சியப் போக்கால் ஏற்­க­னவே ஓராண்டு தாம­த­மாகி விட்­டது. எனவே, இனியும் அலட்­சி­ய­மாக செயல்­ப­டாமல் அர­சியல் சட்ட விஷ­யங்­க­ளிலும், கிரி­மினல் வழக்­கு­களை நடத்­து­வ­திலும் வல்­லமை பெற்ற சட்ட வல்­லு­னர்­களை கண்­ட­றிந்து, அவர்­களை தமி­ழக அரசின் வழக்­க­றி­ஞர்­க­ளாக நிய­மிக்க வேண்டும். இவ்­வ­ழக்கில் உச்ச நீதி­மன்றம் அளிக்­க­வுள்ள தீர்ப்பு 7 தமி­ழர்­களின் விடு­த­லையை மட்­டு­மின்றி, இந்­தியா முழு­வதும் மத்­தியப் புல­னாய்வுப் பிரிவு விசா ­ரிக்கும் வழக்­கு­களில் சம்­பந்­தப்­பட்டோரை விடு­தலை செய்யும் அதி­காரம் யாருக்கு என்­ப­தையும் தீர்­மா­னிக்கும்.

எனவே, இனியும் தாம­திக்­காமல் இவ்­வ­ழக்கில் ஆஜ­ரா­வ­தற்­கான மூத்த வழக்­க­றி­ஞர்­களை அடை­யாளம் கண்டு தமி­ழக அரசு நிய­மிக்க வேண்டும். அதன்­மூலம் இவ்­வ­ழக்கில் அனைத்து தமி­ழர்­களும் விடு­தலை செய்­யப்­ப­டு­வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கிறேன். என்று தெரி­வித்­தி­ருக்­கிறார்.