Breaking News

6024 பேருக்கு ஆசிரியர் நியமனம் 7ஆம்,8ஆம் திகதிகளில் வழங்க ஏற்பாடு

தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு 6,024 ஆசி­ரியர் நிய­ம­னங்கள் 7ஆம் 8ஆம் திக­தி­களில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் மற்றும் ராஜாங்க கல்வி அமைச்சர் வி.இரா­தாகி­ருஷ்ணன் ஆகி­யோரால் வழங்­கப்­படவுள்ளன.

நிய­மனம் வழங்கும் வைபவம் இசு­ரு­பாய, கல்வி அமைச் சின் கட்­டடத் தொகுதி முன்­றலில் அமைக்­கப்­பட்­டுள்ள விஷேட மேடையில் வைத்து வழங்­கப்­படும். ஸ்ரீபாத கல்­வி­யியல் கல்­லூரி உட்­பட ஏனைய கல்­வி­யியல் கல்­லூ­ரி­களில் பயிற்சி பெற்று வெளி­யே­றிய 3,000 பேருக்கு எதிர்­வரும் 7ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை நிய­மனம் வழங்­கப்­படும்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி நடை­பெற்ற போட்டிப் பரீட்­சையில் சித்­தி­யெய்­திய 3024 பேருக்கும் 8ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நிய­மனம் வழங்­கப்­படும் என்று இரா­தா­கி­ருஷ்ணன் வீரகேசரிகுத் தெரிவித்தார்.