சல்மானுக்கு 5 வருட சிறைத்தண்டனை : தீர்ப்பு வௌியானது
இந்தி நடிகர் சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கில் சல்மான் கான் குற்றவாளியாக நீதிபதியால் இனங்காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி நள்ளிரவு மும்பை பாந்திராவில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குற்றச்சாட்டில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, மும்பை செசன்சு கோர்ட்டில் விசாரணை முடிவடைந்தது. 12 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது.
கார்விபத்தில் பாதிக்கப்பட்டவர் பேசுகையில், விபத்து நடந்தபோது எனக்கு 22 வயது இருக்கும், என்னுடைய கால் உடைந்துவிட்டது. தீர்ப்பில் இருந்து எதனையும் எதிர்பாக்கவில்லை. சல்மான்கான் தண்டிக்கப்பட வேண்டாம், ஆனால் 13 ஆண்டுகளாக நான்இழந்தவற்றை திரும்பபெற உதவிவேண்டும், என்று கூறியுள்ளார்.