மைத்திரி-மஹிந்த சந்திப்பில் 5 எம்.பிக்கள் பங்கேற்பர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோபூர்வ வாசஸ்தலத்திலேயே இடம்பெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் காரியாலயத்திலேயே இன்று பிற்பகல் 1.30க்கு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம, டளல் அலகபெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த மற்றும் நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோரும் கலந்துகொள்வர்.