Breaking News

5 வருடங்களுக்குள் இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு - பிரதமர்


எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்நாட்டிலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளதும் பிரச்சினை களுக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

இளைஞர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கக்கூடிய கொள்கைப் பிரகடணமொன்று தயாரிக்கப்பட வேண்டும். அதனைத் தயாரிக்கக்கூடிய உறுப்பினர்கள், அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் எனவும் பிரதமர் கூறினார். மஹரகம இளைஞர் மன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய இளைஞர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.