Breaking News

அலி­பா­பாவும் 56 திரு­டர்­களும் இன்று ஒன்று கூடி­யுள்­ளனர் - ரவி தெரிவிப்பு

இன­வா­தத்­தையும் அடிப்­ப­டை­வா­தத்தையும் மக்கள் மத்­தியில் தூவி அவர்களை ஏமாற்றி மீண்டும் அதி­கா­ரத்தை பெற்றுக்­கொள்­வ­தற்­காக மஹிந்த ராஜபக் ஷ தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறார். அவரின் முயற்­சிகள் ஒரு­போதும் பலிக்­கப்­போ­வ­தில்லை என நிதி­ய­மைச் சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

"அலி­பா­பாவும் 40 திரு­டர்­களும்" என்ற கதை உங்கள் அனை­வ­ருக்கும் தெரியும். ஆனால், இன்று எமது நாட்டின் அலி­பா­பா­வுடன் 56 திரு­டர்­களும் ஒன்று கூடி கை­கோர்த்­ துள்­ளனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜபக்ஷவை அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றார்கள். மாறாக மக்கள் மீதோ நாட்டின் மீதோ இவர்­க­ளுக்கு எவ்­வித அக்­க­றையும் கிடை­யாது எனவும் அவர் குற்றம்சாட்­டினார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆத­ர­வாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளி கட்­சி­களை சேர்ந்­த­வர்­க­ளு­மாக 56 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று முன்­தினம் ஒன்­றாக மேடை­யே­றினர். அது தொடர்­பாக கருத்து தெரி­வித்­த­போதே நிதி அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ஊழல் மோச­டி­க­ளி­லி­ருந்தும் சர்­வா­தி­கார போக்­கி­லி­ருந்தும் நாட்டை பாது­காப்­ப­தற்­ப­கா­கவே கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் இரு பிர­தான கட்­சி­க­ளுடன் மேலும் பல கட்­சி­களும் அமைப்­பு­களும் ஒன்று திரண்­டனர். இதே­போன்று, மக்­களும் அதற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்­க­டித்­தனர்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது, நாம் பல்­வேறு வாக்­கு­று­தி­களை மக்­க­ளுக்கு வழங்­கினோம். அத­ன­டிப்­ப­டையில் அவற்றில் பெரும்­பா­லான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யுள்ளோம். அதேபோல், மிக முக்­கிய அம்­ச­மான நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமைக் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை சொனன்து போல குறைத்ு வர­லாறு படைத்­துள்ளோம்.

ஜன­நா­யக விழு­மி­யங்­களை பாது­காத்து நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டு்­த­தி­யுள்ளோம். அதனை தொடர்ந்து முன்­னெ­டுத்து நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் கொண்டு செல்­வதே எமது நோக்­க­மா­க­வுள்­ளது. அதனை குழப்பி மீண்டும் நல்­லாட்­சியை கேள்விக் குறி­யாக்கும் முயற்­சிகள் இன்று தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அவற்றை நம்கி மக்கள் ஒரு­போதும் ஏமா­ற­மாட்­டார்கள்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் பல்­வேறு மோச­டிகள் வெளிக்­கொ­ண­ரப்­பட்­டன. அத­ன­டிப்­ப­டையில் பல்­வேறு வகையில் தக­வல்கள் திரட்­டப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­துடன் படிப்­ப­டி­யாக ஊழல் மோச­டி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை கைது செய்யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

தேர்தல் முடிந்த கையோடு காட்­டுச்­சட்­டத்தை போல் நாம் யாரையும் கைது செய்­ய­வில்லை. அதற்­கான காரணம் முறை­யான விசா­ர­ணை­களை நடத்தி உரிய சட்ட நட­வ­டிக்­கை­க­ளையே எடுப்­ப­தற்­கா­க­வே­யாகும். அத­னையே தற்­போது காண­மு­டி­கி­றது.

இன்று நாட்டில் சட்­டமும் ஒழுங்கு பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கப்­ப­டு­கி­றது. சட்­டத்­து­றையின் மீது எவ்­வித அழுத்­தங்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவை சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கி­றது. இந்த நிலையை கடந்த ஆட்சி காலத்தின் போது காணக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை.

நாம் இன­வா­தத்தை கட்­ட­விழ்த்­து­விட்டு அர­சியல் செய்­ய­வில்லை. சகல இன,மத மக்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு நாட்டின் எதிர்­கா­லத்தை கருத்­திற்­கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம். அதனை கூட சில சுய­நல அர­சி­யல்­வா­திகள் இனவாத அடிப்படையில் திரிபுபடுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்.

ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே இன்று மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் இதனை மக்கள் அறியாதவர்கள் இல்லை. அதற்கான நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.