மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி
மணிப்பூர் மாநிலத்தில் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்காக, பெரும்பான்மையான பழங்குடியின மக்களின் ஆதரவுடன் சில இயக்கங்கள் செயல்ப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.
பிரிவினைவாத இயக்கங்கள் என கூறப்படும் அவர்கள், டாமெங்லாங் மாவட்டத்தில் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினார்கள்.
அப்போது பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அந்த இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப்படவில்லை. இயக்கத்தை சேர்ந்த நான்கு பேர் பலியானது மட்டுமின்றி, மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.