Breaking News

35 சதவீதமான இலங்கை அகதிகளே நாடு திரும்ப விரும்புகின்றனர்

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் 35 சதவீதமானவர்களே நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

ஏனையோர் அங்கு தொழில் பெற்றுள்ளனர். பெரும்பாலானவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்றுள்ளனர்.  இந்த நிலையில் அவர்கள் இலங்கைக்கு திரும்பும் எண்ணத்தில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.