Breaking News

ஜுன் 27 இல் சட்டமன்ற இடைத் தேர்தல்! சென்னையில் களமிறங்கும் ஜெ.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்­ட­மன்ற இடை­தேர்­தலில் அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளரும் தமி­ழக முதல்­வ­ரு­மான ஜெய­ல­லிதா போட்­டியிட உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகு­திக்கு எதிர்­வரும் ஜூன் 27ஆம் திகதி இடைத் தேர்தல் நடை­பெறும் என தேர்தல் ஆணையம் அறி­வித்­துள்­ளது. இத்­தொ­கு­ தியில் அ.தி.மு.க. வேட்­பா­ள­ராக முதல்வர் ஜெய­ல­லிதா போட்­டி­யிட உள்ளார். சொத்­துக்­கு­விப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்­செ­ய லாளர் ஜெய­ல­லிதா, ஸ்ரீரங்கம் சட்­ட­சபை உறுப்­பினர் மற்றும் தமி­ழக முதல்வர் பத­வியை இழந்தார். பின்னர் சொத்­துக்­கு­விப்பு மேன்­மு­றை­யீட்டு வழக்கில் விடு­தலை பெற்ற ஜெய­ல­லிதா, மீண்டும் தமி­ழக முதல்­வ­ராக பத­வி­யேற்­றுள்ளார். தற்­போது சட்­ட­சபை உறுப்பி­ன­ராக இல்­லாத ஜெய­ல­லிதா அடுத்த 6 மாத காலத்­திற்குள் சட்­டசபை உறுப்­பி­னராக வேண்டும். 

இந்­நி­லையில், அண்­மையில் சென்னை ஆர்.கே. நகர் அ.தி.மு.க.சட்டசபை உறுப்பினரான வெற்­றிவேல் தனது பத­வியை ராஜி­னாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகு­தியில் வெற்­றிடம் ஏற்பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டது. இதனால் ஆர்.கே.நகர் தொகு­தியில் எதிர்­வரும் ஜூன் 27ஆம் திகதி இடைத்­தேர்தல் நடை­பெறும் என தேர்தல் ஆணையம் அறி­வித்­துள்­ளது.

இதற்­கான வேட்­பு­மனுத் தாக்கல் எதிர்­வரும் ஜூன் 3ஆம் திகதி தொடங்­கு­கி­றது. வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்யும் கடைசி திகதி ஜூன் 10 வேட்­பு­ம­னுக்கள் மீதான பரி­சீ­லனை திகதி ஜூன் 11 வேட்­பு­ ம­னுக்­களை மீளப்­பெறும் கடைசி திகதி ஜூன் 13 ஆகும். ஜூன் 27ஆம் திகதி காலை8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்­குப்­ப­திவு நடை­பெறும். 

இந்த வாக்­குகள் ஜூன் 30 ஆம் திகதி எண்­ணப்­பட்டு முடி­வுகள் அறி­விக்­கப்­படும்.இடைத் தேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகு­தியில்தேர்தல் நடத்தை விதி­மு­றைகள் உடனே அமு­லுக்கு வந்­துள்­ளது. ஆர்.கே. நகர் தொகு­தி­யுடன் மேகா­லயா, கேரளா, மத்­திய பிர­தே­சத்தில் தலா ஒரு சட்­ட­சபை தொகு­திக்கும் திரி­பு­ராவில் 2 சட்­ட­சபை தொகு­தி­க­ளுக்கும் இடைத்­தேர்தல் நடை­பெறும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.