Breaking News

நான்கு மாதகாலப்பகுதியில் அரசாங்கம் சாதித்த விடயங்கள் 24 நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம்

இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. 

கடந்த நான்கு மாதகாலப்பகுதியில் அரசாங்கம் சாதித்த விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர 24 நாடுகளின் தூதுவர்களுக்கும், நான்கு அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார். அரசமைப்பு ,நிர்வாக மற்றும் கலாச்சார மாற்றங்கள் ஊடாக ஜனநாயகத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தினது முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள அவர்,பன்முகத்தன்மை கொண்டாடப்படும் உண்மையான பல்லின சமூகமொன்றை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அளித்துள்ள முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். 

அனைத்து இலங்கையர்களினதும் நம்பிக்கையை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள அவர் காணமற்போனவாகள் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கும், பொதுமக்களுக்கு உரிய நிலங்களை மீள வழங்குவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார். 

ஊடகங்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் தொடர்ந்தும் இவ்வாறான சந்திப்பை மேற் கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு எண்ணியுள்ளது, அதற்காக பேச்சாளர் ஓருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.