20ஆவது திருத்தத்தை ஆராய அமைச்சரவை உப-குழு
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான விடயங்களை மேலும் ஆராய்வதற்காக, அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கு அமைச் சரவை தீர்மானித்துள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 06 அமைச்சர்களைக் கொண்ட இந்த உப குழுவிற்கு, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமை வகிக்கவுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியற் கட்சிகள் முன்வைத்த யோசனைகள் மற்றும் திருத்தங்கள் அமைச்சரவை உப குழுவினால் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
அத்துடன், உப குழுவின் அறிக்கை அடுத்த வாரமளவில் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.