Breaking News

இந்தியாவிடம் 200 மில். டொலருக்கு தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகளை வாங்குகிறது இலங்கை

இந்தியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் பெறுமதியான டீசலினால் இயக்கப்படும் தொடருந்து இயந்திரங்கள் மற்றும், தொடருந்துப் பெட்டிகளை வாங்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அறிவித்த கடன் திட்டத்தின் கீழ், இந்த தொடருந்து இயந்திரங்களும், பெட்டிகளும் வாங்கப்படவுள்ளன. 160 ரயில் பெட்டிகள், 30 எரிபொருள் தாங்கி பெட்டிகள், ஆறு டீசல் இயந்திரங்கள் என்பனவே இந்தியாவிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. இவை, அடுத்த மாதம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெரும்பாலும், சீனாவிடம் இருந்தே. தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.