பசில் ராஜபக்ஷ மே 20ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் மூன்று அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு கடந்த 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதனயைடுத்து பசில் ராஜபக்ஸ நேற்று முன்தினம் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அம்புயூலன்ஸ் வண்டியில் வருகைதந்தார்.
சந்தேகநபர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க மற்றும் அதன் பணிப்பாளரான ஆர்.பீ.வீ.திலகசிறி ஆகியோர் சிறைச்சாலை பஸ் வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடயத்தை எடுத்துகூறியதன் பின்னர், கடுவலை நீதவான் அம்புயூலன்ஸ் வண்டிக்கு வருகைத்தந்து பசில் ராஜபக்ஸவை விசாரணை செய்த பின்னர் இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்