Breaking News

நீதிமன்றத் தாக்குதல் குறித்து விசாரிக்க 15 பேர் கொண்ட சிஐடி குழு யாழ். வருகை

யாழ். நீதிமன்றம் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக, இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட விசாரணைக் குழு யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துள்ளனர். நீதிமன்றத் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற சூழல் குறித்தும், குடாநாட்டில் இயல்பு நிலையை சீர்குலைக்க ஏதேனும், தேசவிரோத குழுக்கள் முயற்சித்தனவா என்பது குறித்தும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

முதற்கட்டமாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை குற்றப்புலனாய்வுத் துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தைச் சேர்ந்த வி.ரி.தமிழ்மாறனின் அரசியல் போட்டியாளர்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தனரா என்பது குறித்தும், குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரிக்கவுள்ளனர்.