Breaking News

வெசாக்கை முன்னிட்டு 1400 கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள கைதிகளில் 1400 பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி வெசாக்தினமான இன்று நாடுமுழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் சிறுகுற்றம் புரிந்தவர்கள் , தண்டப்பணம் செலுத்த தவறியவர்கள் இன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவர். அந்தவகையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.