நேபாளத்திற்கு ரூ.100 கோடி கொடுத்த ரொனால்டோ
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
நிலநடுக்கத்தில் நிலைகுலைந்து போன நேபாளத்தை புனரமைக்கும் பணிக்கு உலக நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன.
அந்த வகையில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோ நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார். குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்பின் மூலம் இந்த தொகை நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேரும்.குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.