ரஜினியின் அடுத்த படம் ‘நம்பர் 1’?
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்கிற செய்தி காட்டுத் தீயாய்ப் பரவிவிட்டது. இதனால் கடும் டென்ஷனாகிவிட்டார் ரஜினி . இந்நிலையில் 'லிங்கா’ படத்திற்கு பிறகு ரஜினி அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்று ரஞ்சித் இயக்கத்திலும், அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் ஷங்கர் - ரஜினி கூட்டணி படத்தின் பெயர் குறித்த செய்தி கசிந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள இப்படத்தில் விக்ரம் இன்னொரு நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு பட்ஜெட் மட்டும் 200 கோடியாம். இதன் தயாரிப்பிற்காக 200 கோடியை ஒதுக்கியுள்ளது லைகா நிறுவனம். இந்த படத்திற்கு ‘நம்பர் 1’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
’எந்திரன் 2’ என சொல்லப்பட்டாலும் தற்போதைக்கு அதிகாரப்பூர்வ முடிவுகள் ஏதும் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் கண்டிப்பாக அறிவியல் சார்ந்த கதையம்சம் கொண்டதாம். இப்படத்தின் ஸ்க்ரிப்ட் பணியில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் படம் உருவாக உள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.